தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரசு அலுவலர் ஊழல் வழக்கில் பணி இடமாற்றம் செய்யப்பட்டது தவறில்லை: உயர் நீதிமன்றம் கருத்து - Corruption Case

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அலுவலரை பணி இடமாற்றம் செய்யும் அரசின் நடவடிக்கை தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Government Officer Corrupted Case Chennai High Court
Government Officer Corrupted Case Chennai High Court

By

Published : Aug 12, 2020, 3:17 AM IST

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் நல அமலாக்கப்பிரிவு உதவி ஆணையராக பணிபுரிந்தவர் வளர்மதி. இவர் கையூட்டு பெற்றுக்கொண்டு ஊழல் புரிவதாக வழக்கறிஞர் அசோகன் என்பவர் வளர்மதிக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரை விசாரித்த தொழிலாளர் நல இணை ஆணையர், வளர்மதியை திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையராக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த இடமாறுதலை ரத்துசெய்யக் கோரி வளர்மதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், ”அலுவலர் வளர்மதிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பதாக இணை ஆணையர் அறிக்கை அளித்துள்ளார். இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது வளர்மதி மீது துறைரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை அருகில் உள்ள மாவட்டத்திற்கு இடமாறுதல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, அரசின் இந்த நடவடிக்கையில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கூறி வளர்மதியின் இடமாறுதலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details