தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

100 வயதைக் கடந்த பெண் சுதந்திரப் போராட்ட தியாகி மறைவு! - Netaji Subhas Chandra Bose's INA force,

ராமநாதபுரம்: நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் ஐ.என்.ஏ (INA- Indian National Army) படையின் ஒரு பிரிவான பால சேனையில் பணியாற்றிய காந்திமதி பாய் காலமானார்.

100 வயதைக் கடந்த பெண் சுதந்திர போராட்ட தியாகி மறைவு
100 வயதைக் கடந்த பெண் சுதந்திர போராட்ட தியாகி மறைவு

By

Published : Jul 16, 2020, 5:49 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்திமதி பாய். இவர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் ஐ.என்.ஏ. படையின் ஒரு பிரிவான பாலசேனையில் தனது 12 வயதில் இணைந்து, இந்திய விடுதலைக்காகப் போராடியவர்.

இவர் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலபண்ணைக்குளத்தில் வசித்து வந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக தனது 100ஆவது வயதில் இன்று(ஜூலை 16) காலமானார். இவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடைபெற்றது.

இந்திய விடுதலைக்காக ஆங்கில அரசை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் தன்னை இணைத்து, சுதந்திரத்திற்காகப் போராடிய இந்தப் பெண்மணிக்கு, அவருடைய சொந்தக் கிராமத்தில் நினைவுத் தூண் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details