சென்னை அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம், அன்னை இந்திரா நகர் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (30). இவர், அதே பகுதியில் கட்டுமான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு(ஜூலை 9) யுவராஜ் வீட்டருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நால்வர் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து யுவராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில், யுவராஜிக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இதைக் கண்ட உறவினர்கள் யுவராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன டிப்படையில், காவல் ஆய்வாளர் சிதம்பரம், முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், யுவராஜ் கட்டுமான பொருட்களை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், தன்னார்வலராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.