தெலங்கானா மாநிலத்தில் பெண் வனத்துறை அலுவலர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ பெரிதும் வைரலான நிலையில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை கண்டித்து வனத்துறை சார்பில் கோஷங்கள் எழுப்பி பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணியில் 50 காவல்துறையினர் உட்பட வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அலுவலர் தாக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மரம் நடும் பணி தொடக்கம்!
ஹைதராபாத்: பெண் வனத்துறை ரேஞ்ச் அலுவலர் அனிதா தாக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் மரம் நடும் பணியில் காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அடிலாபாத், வராங்கல் வனத்துறை அலுவலர் கூறியதாவது, வனத்துறை அலுவலர் அனிதா தாக்கப்பட்ட அதே இடத்தில் மரங்களை நடும் பணியில் தற்போது அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி அவரை தாக்கியதால் மட்டுமல்ல, ஒன்றுமே இல்லாத இந்த நிலத்தில் காடு உருவாவதற்கு எடுத்த முயற்சியும் கூட என்று கூறினார்.
மேலும் அனிதா தாக்கப்பட்டதை அடுத்து இரண்டு காவலர் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர், அரசியல் கட்சியினர் அலுவலரை தாக்குவது தெரிந்தும் கைது செய்யப்பட்ட அந்த இரண்டு காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.