தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ”பழனி சார் ஆட்சியர் உமா இடமாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5 ஐஏஎஸ் அலுவலர்கள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: ஐந்து ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்- தமிழ்நாடு அரசு ஆணை.
பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் இடமாற்றம் செய்யப்பட்டு சுகாதாரத் துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சிக் கல்விப் பிரிவு துணை ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கர் லால் குமாவத் சென்னை பெருநகர மாநகராட்சிக் கல்விப் பிரிவு துணை ஆணையராகவும், ஆஷா அஜித் நாகர்கோயில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.