தமிழ்நாடு அரசு ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிச்சீட்டு வழங்கப்படாது என்று ராமேஸ்வரம் மீன்வளத் துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் நாளை மீன்பிடிக்க தடை! - 11,12 தேதிகளில் மீன்பிடிக்க செல்ல தடை
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து நாளை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து 11 ,12 ஆம் தேதிகளில் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை.
மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் துறைமுகப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.