ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே புரெவி புயல் கரையைக் கடக்க இருந்ததன் காரணமாக, கடந்த இரண்டு வார காலமாக மண்டபம், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை குந்துகால் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்தனர்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் - புரெவி புயல்
ராமநாதபுரம்: புரெவி புயல் கரையைக் கடக்க இருந்ததன் காரணமாக, மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
Fisherman's
தற்பொழுது புயலானது வலுவிழந்ததையடுத்து, மீனவர்கள் இன்று(டிச.09) காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இரண்டு வார கால இடைவெளிக்குப்பின் 596 படகுகளில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறையின் அனுமதிச் சீட்டு பெற்று மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.