இத்தாலியின் தலைநகர் ரோம் நகரில் ரோம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிக்கு மூன்றாம் நிலை வீரரும், சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரருமான ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து, ஃபெடரர், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாஸ் ஆகியோருக்கு இடையிலான காலிறுதிப் போட்டி இன்று நடைபெற இருந்தது.
டென்னிஸ்: காயத்தினால் ரோஜர் ஃபெடரர் விலகல்!
காயம் காரணமாக சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர், ரோம் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஃபெடருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். இதனால், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் போட்டியில் விளையாடாமலே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காகவே, தான் இந்தத் தொடரில் விளையாடுவதாக ஃபெடரர் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மே 26ஆம் தேதி பாரிஸில் தொடங்க இருக்கும் பிரஞ்சு ஓபன் தொடரில் ஃபெடரர் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர் இறுதியாக 2015இல் தான் பிரஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.