கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ஃபெடரர், நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் மோதினார்.
முதல் செட்டை 6-3 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-1 என்ற கணக்கிலும் ஃபெடரர் லாவகமாக கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் போட்டி நடைபெற்றது. இதில், ஃபெடரர் 7-6 என்ற கணக்கில் டை பிரேக்கர் மூலம் போராடி வெற்றிபெற்றார்.