தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 15, 2020, 2:05 PM IST

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து கழகத்தின் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் அனைத்து தொழிலாளர்களும் தினமும் பணிக்கு வர வேண்டும் பதிவேட்டில் கண்டிப்பாக கையொப்பமிட வேண்டும் என ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளது.

இந்த கையொப்பம் பதிவு செய்யாதவர்களுக்கு சொந்த விடுப்பு வழங்கப்படுவதாகவும், நிர்வாகங்களில் அறிவுறுத்தல் அடிப்படையில் பணிக்கு வந்து பேருந்து வழங்கப்படாத தொழிலாளர்கள் பேருந்து நிறுத்தங்களுக்கு சென்று பயணிகளை ஏற்றி விடும் பணி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

கரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் அவசர தேவைக்கு பேருந்துகள் இயக்குவதற்கும், பணிமனைகளில் பேருந்துகளை சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்கும், வருகைதந்த பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளின் வாகன ஓட்டுநர் உதவியாளர் போன்றோருக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகம் முன்பு தொமுச சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கிளை மேலாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'அரசின் பொறுப்பின்மையால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு' - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details