2020 மின் வரைவு மசோதா திட்டத்தை கைவிடக்கோரி தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2020 மின் வரைவு மசோதா திட்டத்தில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு தகுந்த நெருக்கடி கொடுத்து அந்த மசோதாவை கைவிட செய்யவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழ்நாடு அரசு விவசாய பெருமக்களுக்கு அறிவிக்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருந்து வரும் இலவச மின்சாரத் திட்டத்தை, கடந்த 30 ஆண்டுகாலமாக விவசாயிகள் பயன்படுத்தி, தங்களது விளை பொருள்களை விற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுத்து, இலவச மின்சாரத் திட்டம் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.