வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் வசிப்பவர்கள் கிருஷ்ணன்(65), சின்னம்மா தம்பதி. இந்த கிருஷ்ணன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.
கிருஷ்ணன் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று, தற்போது தனது சொந்த ஊரில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணனும் அவரது அண்ணன் தாமோதரனும் ஆறு ஏக்கர் நிலத்தில், ஒன்றாக விவசாயம் செய்து வருகின்றனர். அதேசமயம் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட 12 சென்ட் இருவருக்கும் பொதுவில் உள்ளதால், தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையில் அந்த 12 சென்ட் பொது இடத்தில் கிருஷ்ணன், தண்ணீர் தொட்டி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் நேற்று(ஜூன் 10) மாலை அண்ணன், தம்பி இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.