தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

2ஆவது நாளாக விஏஓ-க்கள் காத்திருப்பு போராட்டம்! - ஈரோடு விஏஓ போராட்டம்

ஈரோடு: கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொதுக்கலந்தாய்வு நடத்தப்படாததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Protest
Protest

By

Published : Sep 17, 2020, 3:19 PM IST

ஈரோடு வருவாய் வட்டத்தில் 125க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுக்கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஈரோடு வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தும் கலந்தாய்வு நடத்தாததை கண்டித்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி வரையில் எந்தவிதமான பேச்சுவார்த்தை நடத்தாததை தொடர்ந்து, நேற்று (செப்டம்பர் 16) மாலை முதல் ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள பொதுக்கலந்தாய்வை உடனடியாக நடத்தும் வரையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்து இன்று (செப்டம்பர் 17) இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details