கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒவ்வொரு துறையாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், கோயில்களும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டல்படி கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முக்கிய கோயில்களில் பொதுமக்கள் கூடுவது வழக்கம்.
பவானி கூடுதுறையில் தர்ப்பணம் செய்ய தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஈரோடு: பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரி ஆற்றின் கரையோரப்பகுதிகளில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராட ஈரோடு மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Erode collector kathiravan
இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடுவது தடுக்கப்பட்டு வரும் நிலையில் பவானி, கொடுமுடி காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தடையை மீறி செல்லும் பொதுமக்கள், வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.