தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

புதுச்சேரியில் மின் துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி: மின் துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் மின் துறையை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் மின் துறையை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 21, 2020, 10:10 PM IST

புதுச்சேரி மாநிலம் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின் துறை ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திப்ராயபேட்டை பகுதியில் அமைந்துள்ள மின்துறை தலைமை அலுவலகம், தலைமை தபால் நிலையம் ஆகிய இடங்களில் மின்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் உடனடியாக தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details