தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கல்வி அலுவலருக்கு வெள்ளி பதக்கம்! - கல்வி அலுவலர்

விழுப்புரம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமியை பாராட்டி தமிழ்நாடு அரசு அறிவித்த வெள்ளிப் பதக்கத்தை, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் வழங்கினார்.

silver medal

By

Published : Jul 2, 2019, 11:29 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் கல்வித்துறையின் சார்பில் முன்னாள் படைவீரர் கொடிநாள் நிதி திரட்டுவதில் சிறப்பான முறையில் பணி புரிந்தமைக்காக, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமியை பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில், தலைமைச் செயலாளர் அறிவித்த பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் லெப்.கர்னல், அருள்மொழி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கி. காளிதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details