கோவை, சிவானந்தா காலனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அலுவலகம் உள்ளது. அங்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலையைக் கண்டித்தும்;அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரித்தும்; அங்கு நடக்கும் இனவெறியைக் கண்டித்தும்; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, இனவெறியை நிறுத்தவேண்டும் என்றும்; அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்கவேண்டும் என்றும்; ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலையைக் கண்டிக்கிறோம் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.