தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2020, 6:28 PM IST

ETV Bharat / briefs

திமுக எம்.எல்.ஏ. மனைவி, மகளுக்கு கரோனா தொற்று உறுதி!

பெரம்பலூர்: ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மனைவி, மகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்எல்ஏ வின் மனைவி,மகளுக்கு கரோனா
திமுக எம்எல்ஏ வின் மனைவி,மகளுக்கு கரோனா

கரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 143 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனின் மனைவி, எட்டு வயது மகளுக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இவர்கள் பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் பகுதியிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அதிமுகவை திமுக காப்பியடிக்கிறது' -தளவாய் சுந்தரம்

ABOUT THE AUTHOR

...view details