தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சாத்தான்குளம் விவகாரத்தை திமுக அரசியலாக்க முயற்சிக்கிறது - பாஜக குற்றச்சாட்டு!

திருப்பூர் : சாத்தான்குளம் விவகாரத்தை திமுக அரசியலாக்க முயற்சிப்பதாக பாஜக மாநில தலைவர் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாத்தான்குளம் விவகாரத்தை திமுக அரசியலாக்க முயற்சிக்கிறது - பாஜக குற்றச்சாட்டு!
சாத்தான்குளம் விவகாரத்தை திமுக அரசியலாக்க முயற்சிக்கிறது - பாஜக குற்றச்சாட்டு!

By

Published : Jul 1, 2020, 5:49 PM IST

திருப்பூர் மாவட்டம் வடக்கு மற்றும் தெற்கு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பாஜகவின் மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதன்போது பேசிய அவர், "கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விவகாரத்தில் உலக நாடுகளே திணறும் சூழ்நிலையில் மத்திய பாஜக அரசு நோயை கட்டுப்படுத்தவும், பொருளாதார ரீதியான வீழ்ச்சியை கட்டுப்படுத்தவும் வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சாத்தான்குளம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட்ட தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போதெல்லாம் அமைதி காத்த திமுக தற்போது சாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கி வருகிறது. அரசியல் நோக்கத்தில் எதிர்க்கட்சியான திமுக இவ்வாறு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

சீனப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதே தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடு. மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளை தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருகிறது" என கூறினார்

ABOUT THE AUTHOR

...view details