தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனோ புகாருக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

நீலகிரி: உதகையில் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகாரையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அவர்களுக்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

கரோனோ சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகாரையடுத்து மாவட்ட நிர்வாக நடவடிக்கை
கரோனோ சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகாரையடுத்து மாவட்ட நிர்வாக நடவடிக்கை

By

Published : Jul 24, 2020, 6:58 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் சிகிச்சை பெற்று வருவோர் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி புகார் அளித்ததனர்.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி கேத்தி பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் நடராஜன் தலைமையில் தனியார் பள்ளியிலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:ஒரேநாளில் 1300கிலோ ரேஷன் அரிசி கடத்தல்!

ABOUT THE AUTHOR

...view details