கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் உத்தரவின் படி, கரோனா வைரஸ் தடுப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சொந்த ஊருக்கு திரும்பிய வடமாநில தொழிலாளிகள்! - சொந்த ஊர்களுக்குச் செல்லும் வடமாநிலத்தவர்கள்
கிருஷ்ணகிரி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 1,718 பேரை ஓசூர் ரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினர்.
இந்நிலையில் வெளிமாநிலத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டத்தில் பணிபுரிந்து வந்த 1,718 பணியாளர்களை அவர்களது சொந்த மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்திற்கு சிறப்பு இரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஓசூர் வட்டத்தில் பணிபுரிந்து வந்த 1,718 பணியாளர்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்திற்கு சிறப்பு இரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு நபருக்கு பயண சீட்டு தலா ரூ.1055 வீதம் 1,718 நபர்களுக்கு ரூ.18 இலட்சத்து 12 ஆயிரத்து 490 மதிப்பில் பயண சீட்டு தொகையை தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் செலுத்தி பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். முன்னதாக பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு மருத்துவ சோதனை செய்யப்பட்டது.
வெளி மாநில பயணிகளுக்கு இரயில் பயணத்தின் போது அவர்களுக்கு உண்ண உணவாக சப்பாத்தி,புளிசாதம், பிரெட், பிஸ்கட், 2 லிட்டர் குடிநீர் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.