தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஈராசிரியர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு!

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் பணியிட மாறுதல் பெற்றும் செல்ல முடியாமல் உள்ள 487 இடைநிலை ஆசிரியர்களை அந்தப் பள்ளிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என தொடக்க கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Director of Elementary Education press release
Director of Elementary Education press release

By

Published : Sep 29, 2020, 6:55 AM IST

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "2019 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில் தொடக்கக் கல்வித் துறையைப் பொறுத்தவரையில் இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியாக இருந்தால் , புதிய ஆசிரியர் பணியில் சேர்ந்த பின்புதான் மாறுதல் பெற்ற ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

2019ஆம் ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல் உத்தரவு பெற்று , இதுநாள்வரை பணியிலிருந்து விடுவிக்கப்படாத ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை அவர் மாறுதல் பெற்ற பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் மாறுதல் ஆணை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி விடுப்பு செய்யப்படும்போது, அருகிலுள்ள பிரிதொரு பள்ளியிலிருந்து அவரது பணியிடத்திற்கு ஒரு ஆசிரியரை மாற்றுப்பணி மூலம் நியமனம் செய்ய வேண்டும்.

ஈராசிரியர் பள்ளியில் கற்றல் கற்பித்தல் பணி நடைபெறுவதில் எவ்வித இடையூறும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மாறுதல் ஆணை பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர் பணி வெடிப்பு செய்யப்பட்ட விபரத்தை உடனடியாக கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details