தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'தோனிக்கு தெரியும்.. எப்போ ஓய்வு எடுக்கனும்னு..!' - வார்னே காட்டம்

"கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று தோனிக்கு நன்றாக தெரியும்" என்று, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

'தோனி எப்போ ஓய்வு எடுக்கனும்னு நீங்க சொல்லத் தேவையில்லை' - வார்னே காட்டம்

By

Published : May 27, 2019, 9:48 PM IST

இது குறித்து அவர் கூறுகையில்,

"இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி எந்தளவிற்கு சிறப்பான பங்களிப்பை தர முடியுமோ, அந்த அளவிற்கு தனது பங்களிப்பை தந்துள்ளார். நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாகவே, அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என ஒரு சில ரசிகர்கள் கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை. ஓய்வுக் குறித்து எப்போது முடிவு எடுக்க வேண்டும் என அவருக்குத் தெரியும். உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடனா அல்லது இன்னும் ஐந்துவருடங்கள் கழித்து ஓய்வு பெறுவாரா என்பதை அவரே முடிவு எடுப்பார்" என்றார்.

தனது சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் தோனி 2007இல் டி20 உலகக் கோப்பையும், 2011இல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரையும்,2013இல் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரையும் வென்றுத் தந்தார். 2017இல் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகிய தோனி, தொடர்ந்து விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடிவருகிறார். இருப்பினும், 2018ஆம் ஆண்டு அவருக்கு சற்று மோசமாகவே இருந்தது. 20 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அவர், ஒரு அரைசதமும் விளாசாமல் 275 ரன்களை எடுத்தார்.

தோனி

இதனால், தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என ஒரு சில ரசிகர்கள் கருத்தை முன்வைத்தனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்திய தோனி நடப்பாண்டில் இதுவரை 9 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான்கு அரைசதம் உட்பட 327 ரன்களை குவித்து ஓய்வுக்குறித்த பேச்சிற்கு தக்க பதிலடித் தந்துள்ளார்.

தோனி தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பதால், இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் கைகொடுப்பார். முக்கிய பங்கு வகிப்பார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details