தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் சிலையை இழிவுபடுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - பெரியார் சிலை அவமதிப்பு
தஞ்சாவூர்: பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி இழிவுபடுத்தியதை கண்டித்தும், பென்னாகரத்தில் தலித் சிறுவனை கையால் மலம் அல்ல வைத்த நபரை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி இழிவுபடுத்தியதை கண்டித்தும், பென்னாகரத்தில் ஹரிஹரன் என்ற தலித் சிறுவனை கையால் மலம் அல்ல வைத்த சாதி வெறியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் நீலப்புலிகள் இயக்கம் மாநில துணைத் தலைவர் ரமேஷ் அம்பேத்கர் தலைமையில் மேலக்காவேரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நீல புலி இயக்க நிறுவனத் தலைவர் இளங்கோவன், மாநில துணை பொதுச் செயலாளர் பாலு, நகரச் செயலாளர் விஜயகுமார், தீண்டாமை ஒழிப்பு மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், விடுதலை சிறுத்தை மண்டலச் செயலாளர் விவேகானந்தன், வழக்குரைஞர் அணி மாநில பொறுப்பாளர் நந்திவனம் பாலா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தகுந்த இடைவெளியுடன் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.