சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலின்படி,
ராயபுரம் - 5486 பேர்
திரு.வி.க. நகர் - 3041 பேர்
வளசரவாக்கம் - 1444 பேர்
தண்டையார்பேட்டை - 4370 பேர்
தேனாம்பேட்டை - 4143 பேர்
அம்பத்தூர் - 1190 பேர்
கோடம்பாக்கம் - 3648 பேர்
திருவொற்றியூர் - 1258 பேர்
அடையாறு - 1931 பேர்
அண்ணா நகர் - 3431 பேர்
மாதவரம் - 922 பேர்
மணலி - 483 பேர்
சோழிங்கநல்லூர் - 639 பேர்
பெருங்குடி - 646 பேர்
ஆலந்தூர் - 699 பேர்
மொத்தம் 15 மண்டலங்களில் 34 ஆயிரத்து 245 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதி தீவிரமாக பரவிவரும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை அம்மா மாளிகையில் இன்று காலை தொடங்கியது.
இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜ், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.