நவம்பர் மாத காலகட்டங்களில் கரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று ஐ.சி.எம்.ஆர் தகவல் வெளியிட்டுள்ளது. இது முன்னதாகவே நிகழ்ந்திருக்க கூடியது என்றும் இரண்டு மாதங்கள் பொது முடக்கத்தை மத்திய அரசு அறிவித்ததன் விளைவாக நோய்க் கிருமியின் பரவும் காலம் நீண்டு சென்றுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் கரோனா உச்சமடையும்: ஐ.சி.எம்.ஆர் தகவல் - Corona icmr latest data
டெல்லி: நவம்பர் மாதத்தில் இந்தியாவில் கரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Icmr corona data
மேலும் இந்திய மருத்துவம் மற்றும் சுகாதார துறையின் அளப்பரிய சேவையின் காரணமாக இந்த நோய்க் கிருமியின் தொற்றை முடிந்த அளவு வெற்றிகரமாக கட்டுப்படுத்தி இருக்கிறோம்.
சரியான நேரத்தில் அரசு பொது முடக்கத்தை அறிவித்ததால், பெரும் பாதிப்பிலிருந்து நாம் தப்பி இருக்கிறோம் எனவும் ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.