ராமேஸ்வரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே நடுவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்தன்(64). இவர் தனது 90 சென்ட் நிலத்தில், 50 சென்ட்டில் வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார். இதில் மீதமுள்ள 20 சென்ட் நிலத்தை தனது மகளுக்கு வழங்க விரும்பியுள்ளார். இதற்கு மகன் அர்ஜூன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தந்தையைக் கொன்ற மகன் - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! - Murder case
ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே நடுவலசை கிராமத்தில் தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலம் தொடர்பாக தந்தை மகனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி, தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அர்ஜூன் அவரது மனைவி விஜயபாரதி, மாமனார் ராமமூர்த்தி ஆகியோர் சேர்ந்து காளிமுத்தனை இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக உச்சிப்புளி காவல் துறை வழக்குப் பதிவு செய்து மூன்று பேரைக் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் அர்ஜூனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். சண்முக சுந்தரம் தீர்ப்பு வழங்கினார். மேலும் இவ்வழக்கில் விஜயபாரதி, ராமமூர்த்தி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.