தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நீட் தேர்வு மோசடி செய்த மாணவர் சூர்யா மனு தொடர்பில் சிபிசிஐடி பதில் சொல்ல நீதிமன்றம் உத்தரவு! - நீட் தேர்வு மோசடி

மதுரை : நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட தன்னுடைய உண்மைச் சான்றிதழ்களை மீண்டும் வழங்க கோரியுள்ள மாணவர் உதித் சூர்யா மனு தொடர்பில் சிபிசிஐடி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு மோசடி செய்த மாணவர் சூர்யாவின் மனு தொடர்பில் சிபிசிஐடி பதில் சொல்ல நீதிமன்றம்!
நீட் தேர்வு மோசடி செய்த மாணவர் சூர்யாவின் மனு தொடர்பில் சிபிசிஐடி பதில் சொல்ல நீதிமன்றம்!

By

Published : Jul 25, 2020, 4:30 AM IST

சென்னையைச் சேர்ந்தவர் மாணவர் உதித் சூர்யா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில், இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து என்னை முதல் குற்றவாளியாக சேர்த்தனர். இதில் நான் உள்பட பல்வேறு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டுள்ளோம். இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து தற்போது உயர் நீதிமன்ற உத்தரவின்படி நான் பிணையில் வெளியே உள்ளேன்.

இந்த வழக்கு விசாரணையின்போது எனது 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மையான சான்றிதழ்களும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது, எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைந்து படிக்க நான் முடிவெடுத்துள்ளேன்.

இந்நிலையில் எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரியில் இணைந்து கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர சென்ற நிலையில், உண்மைச் சான்றிதழ்களை கேட்கின்றனர். எனவே எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் இருக்கும் உண்மைச் சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்.

எனவே, நீதிமன்றம் என் படிப்பிற்கு தேவையான பள்ளி சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆவணங்களை மீண்டும் என்னிடம் வழங்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றமிடும் எந்த நிபந்தனையும் நான் பின்பற்ற தயார்" என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "மாணவரின் விசாரணையின்போது கொடுக்கப்பட்ட பள்ளி சான்றுகள் தற்போது நடுவர் நீதிமன்றத்தில் உள்ளன. எனவே, மாணவனின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பள்ளி சான்று ஆவணங்களை வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பொங்கியப்பன், மாணவனின் கல்விச் சான்று வழங்குவது குறித்து சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details