தஞ்சாவூர் பேரூராட்சி மண்டல உதவி இயக்குனர் மாஹின் அபூபக்கர் அறிவுரையின்படி ஒரத்தநாடு செயல் அலுவலர் ரவிசங்கர் முன்னிலையில் பேரூராட்சி அலுவலர்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கை - முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் - Corona Security Action in Thanjavur
தஞ்சாவூர்: பேரூராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு மாவட்ட அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
அப்போது, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி பகுதியில் செயல்பட்டுவரும் அனைத்து வர்த்தக நிறுவனங்களையும், ஒரத்தநாடு கடை தெருவில் உள்ள அத்தியாவசிய பொருள்கள் கடைகளிலும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் முகக்கவசம் அணியாதவர்கள், அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோருக்கு 100 முதல் 1000 ரூபாய்வரை அபராதம் விதித்தனர்.
இனிவரும் காலங்களில் கரோனா நோய் தொற்று ஒரத்தநாடு நகர் பகுதி மக்களுக்கு பாதிக்காமல், பல உயிர்களை காப்பாற்றிட வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.