திருவள்ளூர் மாவட்டம், தண்ணீர் குளம் ஊராட்சியில் கரோனா தொற்றால் வாழ்வாதாரம் முடங்கி கிடக்கும் கிராம தின கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களின் துயர் துடைக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம், போர்ட்டி ஃபர்னிச்சர் இந்தியா நிறுவனம் சார்பில் 800 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா தயாளன், போர்ட்டி ஃபர்னிச்சர் நிறுவன துணை மேலாளர் லோகநாதன், துணை பொது மேலாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினர்.