தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பள்ளி மாணவர்களிடையே மோதல்: சக மாணவர்களுக்கு கத்திக் குத்து - school students

தேனி: பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேருக்கு கத்திக் குத்து, காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களிடையே மோதல்: சக மாணவர்களுக்கு கத்தி குத்து

By

Published : Jul 3, 2019, 1:16 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மன்மதன் (17). இவருக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களுக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மாணவர் மன்மதன்,தனது நண்பர்களுடன் இணைந்து பள்ளி முடிந்து வெளியே வந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் மூவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்களிடையே மோதல்: சக மாணவர்களுக்கு கத்திக் குத்து

ABOUT THE AUTHOR

...view details