தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - மதிமுக கணேஷமூர்த்தி

ஈரோடு : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவருவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

By

Published : Jul 22, 2020, 11:31 PM IST

சென்னையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தை ஆபாசமாக சித்தரித்தும், மூத்த தலைவர் நல்லகண்ணுவை நாகரிகமற்ற முறையில் விமர்சித்தும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்திட வலியுறுத்தி ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தொடங்கி வைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொன்.பாரதி, திமுக அக்னி சந்துரு, காங்கிரஸ் கமிட்டியின் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details