புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு பெண் தனது பெற்றோர்கள், தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்டார். அதனைப் பெற்றோர்கள் வெளியில் சொல்லாமல், மறைத்து அவரை எரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
'இது தற்கொலை அல்ல; ஆணவப்படுகொலை' - கம்யூனிஸ்ட் அமைப்பினர் போராட்டம்! - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
புதுக்கோட்டை: ஆலங்குடியில் பெண்ணுக்கு நிகழ்ந்தது தற்கொலை கிடையாது எனவும்; அது ஆணவப்படுகொலை எனவும் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பினர் போராட்டம் செய்தனர்.
இதுகுறித்து விசாரணை செய்கையில் சம்பவம் உண்மை என்று தெரிய வந்தது. அது தொடர்ந்து, அந்தப் பெண்ணின் காதலன் விவேக் என்பவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும், தற்கொலை என அறிவிக்கக் கூடாது எனவும், ஆணவப்படுகொலை செய்தவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கக்கோரியும் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய மாணவர்கள் சங்கம் அமைப்பினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அமைப்பினர், மாதர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, புதுக்கோட்டை பேருந்துநிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.