கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி காணொலி காட்சி மூலம் நேற்று (ஜூலை 25) திறந்துவைத்தார். இந்த நிகழ்வு விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா, விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி ஆனந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருக்கோவிலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு - அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு - Court building
விழுப்புரம்: நீதிமன்றம் மேம்பாட்டு பணிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து வருவதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "அதிமுக ஆட்சிக்காலத்தில் திண்டிவனம், செஞ்சி, வானூர், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசு அரசு நீதிமன்ற மேம்பாட்டுப் பணிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்துவருகிறது. 2011 முதல் 2016 வரையிலான காலகட்டங்களில் ரூ.711 கோடி நீதிமன்றம் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2014 முதல் 2019 வரையிலான காலகட்டங்களில் ரூ.1,011 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 100 விழுக்காடு நீதிமன்ற வசதிகள் உள்ள மாவட்டம் என்ற பெயர் விழுப்புரத்துக்கு விரைவில் வரும்" இவ்வாறு தெரிவித்தார்.