கோவை மற்றும் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையராக இருந்து வருபவர் ராஜீவ் விஜய்நாபர். அண்மையில் கோவை மாவட்டத்தில் அமலில் இருந்த கரோனா ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தார்.
கோவை மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துவரும் முன்னெச்சரிக்கை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த சில நாள்களாக காய்ச்சல், சளியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (ஜூலை 10) உடல் நிலை மோசமான நிலையில், பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.