தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசுப்பணி: முதலமைச்சர் உத்தரவு! - cheif minister edappadi palanisamy

சென்னை: பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வீர மரணமடைந்த மதியழகன் எனும் ராணுவ வீரரின் மனைவி தமிழரசிக்கு, அரசுப்பணி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசுப்பணி: முதலமைச்சர் உத்தரவு

By

Published : Jun 13, 2020, 1:04 AM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், வெத்தலைக்காரன்காடு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர், இந்திய ராணுவம் 17aaவது மெட்ராஸ் படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவர், ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் பகுதியிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த நான்காம் தேதி வீரமரணம் அடைந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த ராணுவ வீரரின் குடும்பத்தினர், மரணமடைந்த மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் , பாதுகாப்பு பணியில் வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு, மதியழகனின் மனைவி தமிழரசிக்கு, அரசுப் பணி வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details