ரயில்வே துறையில் குறிப்பிட்ட வழித்தடங்கள் மற்றும் ரயில்களை இயக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. மேலும், மின்சாரத் துறையில் செய்யப்பட்ட மாற்றங்களும் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமானதாக உள்ளது.
ரயில்வே தனியார்மயமாக்கல்: மத்திய அரசைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் - சென்னை மாவட்டம்
சென்னை: ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்குத் தாரை வார்ப்பதாகக் கூறி ரயில் நிலையங்களின் எதிரே சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
CITU protest against central government
இதேபோல் தொடர்ந்து மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதாகக் கூறி இந்தியா முழுமையாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலைய முகப்புகளில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.