தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தலைமை மருத்துவராகப் பணிபுரிந்த சுகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதைத் தொடந்து, இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரோனா தொற்று பரவலை தடுக்கும் முன் களப்பணியாளர்களாகவும், தொற்றை எதிர்த்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில் ஒருவரான சுகுமார் தொற்று பாதிப்பிலிருந்து மீளாமல் உயிரிழந்திருப்பது மருத்துவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ரேஷன் பொருள்கள் இலவசம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு