12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.
இதில், பவுலிங், பேட்டிங் என சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 100 வெற்றிகளை பதிவு செய்த இரண்டாவது அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இச்சாதனையை சென்னை அணி தனது 161ஆவது ஐபிஎல் போட்டியில் எட்டியது.