தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனால், கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கரோனா தொற்று தடுப்பு கமிட்டியின் ஆட்சியர்கள் ஆர்தி அகுஜா, ராஜேந்திர ரத்னு ஆகியோரின் தலைமையிலான குழுவினர் இன்று சென்னையில் அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய குழு ஆய்வு! - கரோனா தடுப்பு குழு
சென்னை: கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மத்திய குழுவினர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆய்வு
இதனைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை குறித்து மத்திய குழு ஆய்வில் சிகிச்சை வழங்கும் முறைகள், உணவுகள் வழங்கப்படுவது உள்ளிட்ட விவரங்களை மருத்துவமனை டீன் உள்ளிட்டோரிடம் கேட்டு தெரிந்துகொண்டனர்.