தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மன்னர்மன்னன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் - bharthi dhasan son mannar mannan

சென்னை: தமிழறிஞர் மன்னர்மன்னன் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 மன்னர்மன்னன் மறைவிற்கு முதலமைச்சர்  இரங்கல்
மன்னர்மன்னன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

By

Published : Jul 6, 2020, 10:14 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், “புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர்மன்னன் இன்று ( 6.7.2020 ) உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மன்னர்மன்னன் தமிழ்நாடு அரசின் திருவிக விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும், மொழிப்போர் போராட்டத்திலும் ஈடுபட்ட தியாகியாவார்.

மன்னர்மன்னன், கர்மவீரர் காமராஜர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் உள்ளிட்டவர்களிடம் நெருங்கிப் பழகி, அவர்களின் அன்பைப் பெற்றவர். 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி சிறந்த எழுத்தாளராகவும், சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

மன்னர்மன்னன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்லஇறைவனை வேண்டுகிறேன்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details