தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

‘தேசிய கீதம்’ பாடி சான்றிதழ் பெற்ற இளைஞர்! - Certified youth singing the National Anthem

புதுச்சேரி: இளைஞர் ஒருவர் தேசிய கீதத்தை முழுமையாக பாடிவிட்டு காவல் நிலையத்தில் சான்றிதழை வாங்கிச் சென்றார்.

Certified youth singing national anthem
Certified youth singing national anthem

By

Published : Jun 18, 2020, 6:23 AM IST

புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் பட்டதாரி இளைஞர் ஒருவர் தனியார் வங்கியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், வங்கி கேட்டுக் கொண்டதன் பேரில் தன் மீது எந்த ஒரு வழக்கும் இல்லை என்ற சான்றிதழ் பெறுவதற்காக லாஸ்பேட்டை காவல் நிலையம் வந்துள்ளார்.

அவரிடம் இதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் சான்றிதழ் வேண்டுமெனில் தேசிய கீதத்தை ஒரு முறை முழுவதுமாக பாடுமாறு கேட்டுள்ளார்.

அப்போது, அந்த இளைஞர் தேசிய கீதத்தை சரியாக பாடவில்லை.

இதனால், காவல் ஆய்வாளர் தேசிய கீதத்தை முழுவதுமாக பாடி விட்டு சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அவரை திருப்பி அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், நேற்று அந்த இளைஞர் தேசிய கீதத்தை முழுவதுமாக அவரிடம் பாடி காண்பித்துவிட்டு காவல்துறையினரிடம் சான்றிதழ்லைப் பெற்றுச் சென்றார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:பாலைவனமாக்கல், வறட்சியை எதிர்ப்போம்!

ABOUT THE AUTHOR

...view details