தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மரவள்ளிகிழக்கு மதிப்பு கூட்டல் பொருள்கள் தயாரிப்பிற்காக ரூ.2500 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு! - ஆத்ம நிர்பார் பாரத்

கள்ளக்குறிச்சி : தமிழ்நாட்டில் மரவள்ளி கிழங்கின் மதிப்பு கூட்டல் பொருள் தயாரிப்பிற்காக சுமார் 2500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேலம் ஏ.சி.முருகேசன் தெரிவித்துள்ளார்.

மரவள்ளிகிழக்கு மதிப்பு கூட்டல் பொருள்கள் தயாரிப்பிற்காக ரூ.2500 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு!
மரவள்ளிகிழக்கு மதிப்பு கூட்டல் பொருள்கள் தயாரிப்பிற்காக ரூ.2500 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு!

By

Published : Jul 11, 2020, 11:55 PM IST

பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் என்ற தலைப்பில் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.முருகேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், " கரோனா பொருளாதார வீழ்ச்சி நிலையிலிருந்து நாட்டை முன்னேற்ற சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், 21 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி தந்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டிற்கு குறிப்பாக கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயத்திற்கு 2,500 கோடி ரூபாய் மரவள்ளி கிழங்கு மதிப்பு கூட்டப்பபட்ட தயாரிப்பிற்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது.

கால்நடைத் துறை 50 ஆயிரம் கோடி ரூபாயையும், ஊரக வேலைவாய்ப்பு திட்டம், நடைபாதை வியாபாரிகளின் வளர்ச்சிக்காக திட்டம், ஜத்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பெட்டிக் கடைக்காரர்களுக்கு 10,000 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாத கடன் உதவி, எந்தவொரு பிணையும் இல்லாமல் மத்திய அரசு வழங்குகிறது.

கிராமப்புற வேலைவாய்பை மேம்படுத்த 1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைப்போல எல்லாம் துறை சார்ந்தவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றிவருகிறது.

இந்தியா சுயசார்பாக எந்த நாட்டினுடைய உதவியும் இல்லாமல் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், கரோனா சமயத்தில் கூட நமது பொருளாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்" என்றார்.

பேட்டியின்போது பாஜகவின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details