தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராடிய 134 பேர் மீது வழக்கு - தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

ராமநாதபுரம்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிய 134 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Agriculture act 2020
Farmers protest in Delhi

By

Published : Dec 9, 2020, 12:12 PM IST

டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக 10 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நேற்று (டிச. 08) நாடு முழுவதும் மக்களை பாரத் பந்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர்.

தமிழ்நாடில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்துகளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் வேளாண் சட்டத்திற்கு ஆதரவாகப் போராடிய 134 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details