தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வெண்ணெய், நெய் விலை சரிவு - உற்பத்தியாளர்கள் வேதனை - வெண்ணெய் உற்பத்தியாளர்கள் வேதனை

திருப்பூர்: கரோனா ஊரடங்கு காரணமாக புகழ்பெற்ற ஊத்துக்குளியில் 50 டன் அளவிற்கு வெண்ணெய் , நெய் தேக்கம் அடைந்து விலை சரிவை சந்தித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் வேதனையில் உள்ளனர்.

 வெண்ணெய் , நெய் விலை சரிவு - உற்பத்தியாளர்கள் வேதனை
வெண்ணெய் , நெய் விலை சரிவு - உற்பத்தியாளர்கள் வேதனை

By

Published : Jun 3, 2020, 2:28 AM IST

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உற்பத்தி செய்யப்படும் வெண்ணெய் மற்றும் நெய் இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற பெற்ற ஒன்றாகும். இங்கு வளர்க்கப்படும் மாடு, எருமைகளில் கிடைக்கும் பாலைக்கொண்டு நாளொன்றுக்கு 5 முதல் 8 டன் வரை வெண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதுக்கும் வெண்ணெய் மற்றும் நெய் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்துக்கு தேவையான தயிரின் 30 சதவீதம் ஊத்துக்குளியிலிருந்து ரயில் மற்றும் லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

கரோனா தொற்றினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், ஊத்துக்குளியிலிருந்து வெண்ணெய் வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்ப முடியாமல் போனது. மேலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் விற்பனையும் சரிந்து போனது.

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பாலுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையில், வெண்ணெய் விற்பனை வருவாயும் இல்லாததால் கடன் வாங்கி விவசாயிகளுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.

தினமும் உற்பத்தியாகும் பாலை விவசாயிகளிடம் பெற்று அதனை வெண்ணெய்யாக மாற்றி குளிர்பதன கிடங்குகளில் வாடகை அடிப்படையில் உற்பத்தியாளர்கள் இருப்பு வைக்க ஆரம்பித்தனர். தற்போது சுமார் 50 டன்னுக்கும் அதிகமாக வெண்ணெய் இருப்பில் உள்ள நிலையில், விலை 70 ரூபாய் குறைந்து கிலோ ரூ.350 விற்பனையாவதால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என கூறுகின்றனர்.

அத்தோடு தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் மூலம் வெண்ணெய், நெய் விற்பனைக்கு சென்றாலும், தற்போதுள்ள இருப்பை தீர்க்கவே 3 மாதங்கள் தேவைப்படும். எனவே, தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இவற்றை அனுப்ப நடவடிக்கை எடுத்து வெண்ணெய் தொழிலை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details