தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உடன்பிறந்த சகோதரர்கள் அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. அண்ணன் மகராஜன் திமுக வேட்பாளராகவும், தம்பி லோகிராஜன் அதிமுக வேட்பாளராகவும் போட்டியிட்டனர்.
அண்ணன் திமுக, தம்பி அதிமுக வெற்றிபெறப்போவது யார்?
தமிழ்நாட்டின் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட உடன்பிறந்த சகோதர்களில் யார் வெற்றிபெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான பதில் இன்று தெரிந்துவிடும்.
அண்ணன் திமுக, தம்பி அதிமுக வெற்றிபெறபோவது யார்?
இந்நிலையில், மக்களவைத் தேர்தல், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கவுள்ளது. உடன்பிறந்த சகோதரர்களான மகராஜன் - லோகிராஜன் இவர்களில் யார் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.