சேலம் மாவட்டத்தில் உள்ள குட்டி கேரளா என அழைக்கப்படும் பூலாம்பட்டியில் படகுத்துறை உள்ளது. இம்மாவட்ட சுற்றுப்புற ஊர்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து விடுமுறை காலங்களில் 'போட்டிங்' சென்று இயற்கை அழகை ரசித்து மகிழ்கின்றனர்.
பாதுகாப்பு இல்லா படகுத்துறை - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை - Salem district
சேலம்: முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளி பின்பற்றாமல் இயங்கும் பூலாம்பட்டி படகுத்துறையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் முக்கிய படகுத்துறையாகவும் பூலாம்பட்டி உள்ளது. தற்போது கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு வரும் பயணிகள் தகுந்த இடைவெளியை பின்பற்றாமலும், பாதுகாப்பு முகக்கவசம் இல்லாமலும் வருவது பூலாம்பட்டியில் வாடிக்கையாக உள்ளது.
இவ்வாறு வரும் பயணிகளை எந்த நிர்வாகமும் மருத்துவ பரிசோதனை செய்யாமல் அனுமதிப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத் துறை இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.