ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் அதிமுக சார்பில் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ரத்த தான முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்றது.
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்! - Sivasupramani, Member of the Legislative Assembly
ஈரோடு: மொடக்குறிச்சியில், ரத்ததான முகாமை சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி தொடங்கிவைத்தார்.
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்!
இதனை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் அதிமுகவினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.
ரத்த தான முகாமில் கலந்து கொண்டவர்களை பாராட்டி சான்றிதழ்களை சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி சேர்மேன் கணபதி, துணை சேர்மேன் மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.