தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'இப்போது செலவு செய்யத் தயங்கினால் விளைவுகள் மோசமானதாக மாறும்!' - உலக சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர் மருத்துவர் என்கோசி ஒகோன்ஜோ-இவெலா

ஜெனீவா : கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவதற்கு இப்போது செலவு செய்யாது போனால், பிற்காலத்தில் பெரும் வீழ்ச்சியை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்போது செலவு செய்ய தயங்கினால் விளைவுகள் மோசமானதாக மாறும்!
இப்போது செலவு செய்ய தயங்கினால் விளைவுகள் மோசமானதாக மாறும்!

By

Published : Jun 28, 2020, 12:12 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி நிற்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் இதுவரை 210க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 4 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளதாக ஜான் ஓப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பெருந்தொற்று நோயான கோவிட்-19க்கு தடுப்பு மருந்து இதுநாள்வரை கண்டுபிடிக்கப்படாத நிலையே இருந்து வருகிறது. இந்நிலையில், உலகின் சில நாடுகளும், மிகப்பெரிய மருந்து நிறுவனங்களும் கோவிட்-19க்கு மருந்து உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும், பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்க பெரிய அளவிலான பொருளாதாரம் தேவைப்படும் என்ற காரணத்தால் தயக்கம் காட்டி வருகின்றன.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர்களில் ஒருவரான மருத்துவர் என்கோசி ஒகோன்ஜோ-இவெலா, "கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் சிகிச்சை கருவிகளுக்கான தேவை உலகெங்கிலும் தற்போது எழுந்துள்ளது.

தடுப்பூசி சிகிச்சையை உருவாக்குவதற்கான உலகளாவிய உந்துதலின் பின்னணியில் இயங்கிவரும் வல்லுநர்கள், இந்தப் பணிகளுக்காக மிகப்பெரிய நிதி தேவைப்படும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, இப்போது முதலீடு செய்ய முடியாத சூழலில் நிற்கின்றன.

இப்போது அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளைவிட பிற்காலத்தில் இன்னும் மோசமான நெருக்கடியை, இழப்புகளை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

உலக சுகாதார அமைப்பும் அதன் கூட்டாளி நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் 31 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் தேவைப்படலாம்.

மதிப்பு முன்மொழிவு தெளிவாக உள்ளது. தொற்றுநோய்க்கு ஒரு விரைவான முடிவை கொண்டுவர நாம் செயலில் இறங்க வேண்டும். நாம் இப்போது அணிதிரட்டவில்லை என்றால், மனித இழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் நாம் எண்ணிப்பார்க்காத வகையில் ஏற்படலாம். இந்தத் தொகை பெரிதாகத் தெரிந்தாலும், நம்மிடம் வேறு மாற்று வழிகள் எதுவும் இல்லை" என்றார்.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடனான உலக சுகாதார அமைப்பின் இணைய மாநாடு நடைபெற்றபோது, அதிலும் இந்த தடுப்பூசி உருவாக்கும் முயற்சிகளுக்கு உலகளாவிய அளவில் புதிய ஆதரவையும், நிதியையும் திரட்ட வேண்டும் என விவாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details