தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சீனப் பிரச்னை: தொலைநோக்குடனும் விவேகத்துடனும் முன்னேற வேண்டிய நேரம் இது!

சீனாவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக,  இறக்குமதி வரியை அதிகரிக்கவும், ரயில்வே, பிஎஸ்என்எல் போன்ற அரசாங்க ஒப்பந்தங்களில் சீனாவை விலக்கி வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Better sense to guide
Better sense to guide

By

Published : Jun 25, 2020, 1:14 AM IST

கால்வன் பள்ளத்தாக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதல்களில் சீன ராணுவத்தால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதன்காரணமாக சீனா மீது நாடு தழுவிய வெறுப்பும், சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கையும் எழுந்துள்ளன.

உள்நாட்டு உற்பத்தித் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடை விதிக்கவும் நேரடி அந்நிய முதலீடு என்ற பெயரில் இந்திய நிறுவனங்களில், சீனா முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்; கரோனா பிரச்னையை ஒரு நல்வாய்ப்பாகக் கருதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சுய சார்பு இந்தியா ('ஆத்மநிர்பர் பாரத்') என்ற திட்டத்தை அறிவித்தது.

சீனாவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இறக்குமதி வரியை அதிகரிக்கவும், ரயில்வே, பிஎஸ்என்எல் போன்ற அரசாங்க ஒப்பந்தங்களில் சீனாவை விலக்கி வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏழு பில்லியனுக்கும் அதிகமான சிறு வர்த்தகர்களைக் கொண்ட 40க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புகள் 450 பிரிவுகளின்கீழ், இந்தியாவுக்கு வரும் மூவாயிரம் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க விரும்புகிறது.

டிசம்பர் 2021க்குள், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் இறக்குமதியை ரூ.1லட்சம் கோடியாக குறைக்க அரசாங்கம் விரும்புகிறது. தற்போதைய இறக்குமதி 5.25 லட்சம் கோடி ரூபாயை உள்ளடக்கிய, நமது பொருளாதாரத்தில், சீனா எந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சீனாவில் தயாரிக்கப்படும் சிறிய பொம்மைகள் முதல் சணல் வரை, மொத்த மருந்துகள் முதல் மிதிவண்டி வரையிலான இறக்குமதி வரை, உள்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பாதிக்கின்றன என்பதை நாடாளுமன்ற நிலைக்குழு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெளிவுபடுத்தியது.

எவ்வாறாயினும், தற்போதைய கோவிட் நெருக்கடி காரணமாக ஒவ்வொரு விஷயத்திலும் ஏற்கெனவே நலிவடைந்த நிலையில், சீனாவிலிருந்து இறக்குமதியை திடீரென புறக்கணிக்கும் முடிவு தங்களது பொருளாதார நிலையை மேலும் மோசமடையச் செய்யும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கவலை கொண்டுள்ளன.

இந்திய - சீன இருதரப்பு ராஜதந்திர உறவின் 70ஆவது ஆண்டு இது. கடந்த ஏப்ரல் மாதம், இரு நாடுகளும் ஒரு புதிய நிலையை எட்டியதாகவும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றன என்று ஜி ஜின்பிங் நம்பியபோது ​​ சீனாவில் 60 விழுக்காடு இருதரப்பு வர்த்தக பற்றாக்குறையை இந்தியா பார்த்துக் கொண்டிருந்தது.

எல்லை மோதல்களுக்குப் பின்னர், சீனப் பொருள்களை புறக்கணிக்கும் கோரிக்கையை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்று சீனாவிலிருந்து வெளிவரும் 'குளோபல் டைம்ஸ்' என்ற ஆங்கில பத்திரிகை கூறியுள்ளது.

இருப்பினும், சீனாவின் மலிவான பொருள்களை இழக்க இந்தியா விரும்பாது என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பு, 'நாம் சீனாவை நிராகரித்தால் ரசாயனங்கள், சாயங்கள், மின்னணு பொருள்கள் மற்றும் மூலப்பொருள்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்படும். ஏனென்றால், அவற்றை தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது 25-40 விழுக்காடு வரை விலை அதிகரிக்கும்' என்று கூறியுள்ளது.

சீனாவிலிருந்து இந்திய இறக்குமதி 14 விழுக்காடு என்ற அளவில் உள்ளபோது, சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி இரண்டு விழுக்காடு தான் என்பது யாரை யார் சார்ந்திருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது.

1990 வரை அத்தியாவசிய மருந்து பொருள்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருந்த இந்தியா, இன்று 80% சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. அத்தியாவசிய மருந்து பொருள்கள் இறக்குமதியை நிறுத்துவது, மருந்துத் தொழிலுக்கு ஆபத்து மட்டுமல்ல; விலையில் 40 விழுக்காடு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவிலிருந்து இறக்குமதியைத் தவிர்ப்பது கடினம், ஏனென்றால் வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும்போது அதிக தயாரிப்பு விலைகளுக்கு மேல் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின்படி அந்த நாடுகளுக்கும் இதேபோன்ற வரிகளை நாம் செலுத்த வேண்டும்.

மேலும், ஜப்பானிய, பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பொருள்களை புறக்கணிக்க சீனா மேற்கொண்ட முயற்சிகளால் வெற்றிபெற முடியவில்லை என்ற வரலாறு இருக்கிறது. தொழில்துறை வட்டாரங்கள் இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க நீண்டகால திட்டத்தை விரும்புகின்றது; அவசர மற்றும் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகளை அல்ல. தொலைநோக்குடனும் விவேகத்துடனும் முன்னேற வேண்டிய நேரம் இது!

ABOUT THE AUTHOR

...view details